fbpx

தஞ்சை அருகே பயங்கரம்: 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு.! 5 இளைஞர்கள் கைது.!

தஞ்சாவூர் அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் தனியாக பேச வேண்டும் என்று அபினேஷ் என்ற இளைஞர் கேட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞருடன் சிறுமி சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த அபினேஷ் நண்பர்கள் சிறுமியை ஆளில்லாத பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து அபினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததை செல்போனில் படம் எடுத்ததாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் அபினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

திடீரென முதல்வரை சந்தித்த பொன்முடி..!! அடுத்த பிளான் இதுதான்..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

Fri Dec 22 , 2023
சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொன்முடி, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, எம்.பி., எம்எல்ஏக்கள் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டாலே அவர்கள் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அந்த வகையில், பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை பொன்முடி […]

You May Like