fbpx

மாமியாருடன் தகராறு.., காவல் நிலையம் வந்த சிறுமி..! மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த காவல் உதவி ஆய்வாளர்..!

தர்மபுரி மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறை உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டு இருக்கும் இசை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

தர்மபுரி மாவட்டம் பொன்னாகரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் அவருக்கும் அவரது மாமியாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தொடர்ந்து அந்த சிறுமி காவல்துறையின் உதவியை நாடி இருக்கிறார். இது தொடர்பாக அந்த சிறுமி ஏரியூர் காவல் நிலையத்தில் தனது மாமியாரின் மீது புகார் தெரிவித்துள்ளார்.

அந்தக் காவல் நிலையத்தில் சகாதேவன் என்ற 55 வயது காவல் உதவி ஆய்வாளர் சிறுமியை மிரட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இவரது கொடுமை பொறுத்துக் கொள்ள இயலாத சிறுமி இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறை உயர் அதிகாரிகள் எஸ்எஸ்ஐ சகாதேவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. காவல்துறை அதிகாரி சிறுமியிடம் அத்துமீறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Kathir

Next Post

மசோதாக்களை திருப்பி அனுப்பியது இதற்காகத்தான்..!! சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை உடைத்த ஆளுநர் தரப்பு..!!

Mon Nov 20 , 2023
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி விதிப்படி அரசு செயல்படாததால் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மசோதாக்களை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் பாரதியார் பல்கலைக் கழகம் உள்ளிட்ட 3 பல்கலைக் கழக துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதில், உச்சநீதிமன்ற விதிப்படி துணைவேந்தர் […]

You May Like