fbpx

17 வயது சிறுமி சுட்டுக்கொலை.! செல்போனில் பேசியதால் அண்ணன் வெறி செயல்.! பதற வைத்த வாக்குமூலம்.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சகோதரியை சுட்டுக்கொலை செய்த வழக்கில் 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞனிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

உத்திர பிரதேசம் மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 17 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் சிறுமியின் 20 வயது சகோதரன் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் சகோதரரான ஆதித்ய பிரஜாபதி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியது காவல்துறை. இதில் சிறுமியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்

தனது சகோதரி வேறொரு நபருடன் செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் சகோதரியை சுட்டுக்கொலை செய்ததாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களது தாயும் இந்த கொலை சம்பவத்தை மறைக்கும் இயன்றதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Post

வகுப்பறையில் சுட்டு கொலை செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவி.! பழி தீர்த்த காதலன்.!

Wed Dec 13 , 2023
பீகார் மாநிலத்தில் வகுப்பறையில் வைத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்த மாணவனை கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவனிடம் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநில தலைநகரான பாட்னாவில் உள்ள கோச்சிங் கிளாசில் மாணவ மாணவிகள் பயின்று வந்துள்ளனர். இதில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும் மாணவியும் காதலித்து வந்திருக்கின்றனர். கடந்த அக்டோபர் […]

You May Like