fbpx

18+ பெண்கள்தான் டார்கெட்!. 700 பெண்களின் வீடியோ, புகைப்படங்கள்!. ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் மோசடி செய்த 23 வயது இளைஞர் கைது!. அதிர்ச்சி பின்னணி!.

Online dating app: ஆன்லைனில் பல்வேறு போலி கணக்குகள் மூலம் இளம்பெண்களை ஆசை வலையில் வீழ்த்தி மிரட்டி பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டு வந்த 23 வயது இளைஞரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

டெல்லியை சேர்ந்தவர் துஷார் சிங் பிஷ்ட்(23) , உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் 3 ஆண்டாகப் பணியாற்றி வரும் இவர், ஆன்லைனில் பல்வேறு போலி கணக்குகளை தொடங்கி 18 முதல் 30 வயது வரையிலான பெண்களிடம் அறிமுகமாகி பேசி வந்துள்ளார். அவர்களிடம் தன்னை ஒரு அமெரிக்க மாடல் என்றும், திருமணம் செய்து கொள்வதற்காக பெண் தேடி இந்தியாவிற்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பி பல இளம்பெண்கள் இவரது வலையில் விழுந்துள்ளனர். அந்தப் பெண்களின் நம்பிக்கையை பெற்ற பின், அவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை துஷார் சிங் கேட்டுள்ளார். அந்தப் பெண்களும் அவற்றை இவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்களிடம் அந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், துஷார் சிங்கால் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்த டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர், இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் துஷார் சிங்கின் இருப்பிடத்தை கண்டறிந்து அவரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், துஷார் சிங் இதுவரை சுமார் 700 பெண்களிடம் தன்னை அமெரிக்க மாடல் எனக்கூறி ஏமாற்றியுள்ளார் என தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து மொபைல் போன், 13 கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Readmore: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக வயதான நபர்!. 116 வயதான ஜப்பானிய மூதாட்டி காலமானார்!.

English Summary

18+ girls are the target!. 700 girls video, photos!. 23-year-old youth arrested for fraud through online dating app! Shock background!.

Kokila

Next Post

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை...! ஆளுநரை சந்தித்து பாஜக மகளிரணி மனு...!

Sun Jan 5 , 2025
CBI should investigate the sexual assault case of Anna University student

You May Like