fbpx

தமிழகமே…! ரேஷன் கடைகளில் 21 முதல் 27-ம் தேதி வரை…! அரசு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்…!

கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ 11.7 லட்சம் மதிப்புள்ள 1809 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது..

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் அல்லது சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்கிறது. விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

வசதி படைத்த நபர்களும் முக்கிய பிரமுகர்களும் ரேஷனில் பொருட்கள் வாங்குகிறார்களா? அறிக்கை தர உணவுத்துறை உத்தரவு..!

உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980ன் படி தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, 21.11.2022 முதல் 27.11.2022 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ, 11,73,395/- மதிப்புள்ள 1809 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி கைப்பற்றப்பட்டது. மேலும், மண்ணெண்ணெய் 87 லிட்டர், 72 எரிவாயு உருளை, துவரம் பருப்பு 3,520 கிலோ ஆகியவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 47 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்ட 191 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் 2 நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் 1980ன் படி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பெற்றோர்களே கவனம்...! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது...! அரசு அறிவிப்பு...!

Fri Dec 2 , 2022
சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறை தினத்தை சமன் செய்யும் வகையில் வாரம் தோறும் சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்ட வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்திலும் நாளை பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]

You May Like