fbpx

மத்திய அரசு அதிரடி.. கட்டாய சான்றிதழின் கீழ் 769 பொருட்களுக்கு 187 தரக்கட்டுப்பாடு ஆணை..! முழு விவரம்

கட்டாய சான்றிதழின் கீழ், 769 பொருட்களுக்கான 187 தரக்கட்டுப்பாடு ஆணைகளை இந்திய தர நிர்ணய அமைவனம் அறிவித்துள்ளது.

கட்டாய சான்றிதழின் கீழ்க்கண்ட, 769 பொருட்களுக்கான 187 தரக்கட்டுப்பாடு ஆணைகளை இந்திய தர நிர்ணய அமைவனம் அறிவித்துள்ளது. இதுபற்றிய முழு விவரங்களும், பட்டியலும் https://www.bis.gov.in/product-certification/products-under-compulsory-certification/ என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. தேவைகள் ஏற்படும் போது, அமைச்சகங்கள் / துறைகளின் கருத்துகளுக்கு இணங்க கட்டாயமான தரக்கட்டுப்பாடு ஆணையின் கீழ், பல்வேறு பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

இந்திய தர நிர்ணய அமைவனத்துடன் கலந்து ஆலோசித்து இந்நிறுவனத்திற்கான சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி கட்டாய சான்றிதழுக்குரிய ஆணைகளை அமைச்சகங்களும், துறைகளும் வெளியிடுகின்றன. மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை இணையமைச்சர் பி.எல்.வர்மா மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்தார்.

English Summary

187 quality control orders for 769 items

Vignesh

Next Post

’இனிமே தான் ஆட்டமே இருக்கு’..!! 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பம்..!! அடுத்த 4 நாட்களுக்கு வார்னிங் கொடுத்த வானிலை மையம்..!!

Thu Mar 13 , 2025
Maximum temperatures may gradually rise by 2-3° Celsius at a few places in Tamil Nadu from today (March 13) to March 16.

You May Like