fbpx

மெகா அறிவிப்பு…! மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்…! தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், கவுர விரிவுரையாளர்களுக்கு மாதம் 20,000 தொகுப்பூதியத்தில் நியமிக்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 7,198 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 5,303 கவுர விரிவுரையாளர்கள் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர். மீதமுள்ள 1,895 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், மாணவர்களுக்கு வகுப்பு நடத்துவதில் சிரமமாக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரால் மட்டுமே அறிவிக்கப்பட வேண்டும். மானியக்குழுவின் ஒழுங்குமுறைகள் 2018 ன் படி உரிய கல்வித் தகுதி பெற்றவர்கள் மட்டுமே தகுதியுடையவராக கருத்தப்படுவர். நியமனம் செய்யப்படும் கவுரவ விரிவுரையாளர்கள் அந்தக் கல்வியாண்டிற்கு மட்டும் தற்காலிகமாக நியமனம் செய்யப்படுகின்றனர் என்ற விபரம் தெரிவிக்கப்பட வேண்டும். நியமனம் செய்வதற்கான குழுவில் சார்ந்த மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் தலைவராகவும், உறுப்பினர்களாக மண்டலத்தில் உள்ள மூன்று கல்லூரி முதல்வர்கள் , சார்ந்த கல்லூரி முதல்வர் ,பணியில் மூத்த ஆசிரியர் அல்லது முதல்வர் (பட்டியல் இனத்தைச் சார்ந்த இணை பேராசிரியர்) நிலைக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

ஒரே மதிப்பெண் கொண்ட இருவர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கின்ற போது அவர்களுள் கல்லூரியில் இருந்து 20 அல்லது 25 கிலோமீட்டர் தொலைவில் வசிப்பிடம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மதிப்பெண் மற்றும் இருப்பிடம் இரண்டும் ஒன்றாக உள்ள நபர்களில் வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கவுரவ விரிவுரையாளர்கள் டிசம்பர் 2022 முதல் 2023 ம் ஆண்டு ஏப்ரல் வரையில் 5 மாதங்களுக்கு மட்டுமே நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

"மக்களே கவனம்” இன்று முதல் அமலுக்கு வரும் 4 புதிய முக்கிய மாற்றங்கள்…! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்…!

Thu Dec 1 , 2022
மாதத்தின் தொடக்க நாள் என்பதால் இன்று முதல் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு உள்ளன. அது என்னென்ன என்பதை பார்க்கலாம். KYC-யை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும்: பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது KYC-யை டிசம்பர் 12-ம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும். ஒரு வேளை அப்டேட் செய்யவில்லை என்றால் உங்கள் பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்படலாம். ஏற்கனவே வங்கி தரப்பில் இருந்து பலமுறை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது […]

You May Like