அலகு விட்டு அலகு மாறுதல் பெற்றவர்களை கல்வி ஆண்டு முடிந்ததும் விடுவிப்பு செய்ய தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், வலசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக ஆர்சுகன்யா என்பார் பள்ளிக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்றுள்ளதாகவும் தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு […]

கோல்டு திட்டத்தின் கீழ் ஒரு ஆசிரியருக்கு ரூ.1000 என ரூ.3.56 கோடி தேசிய ஆசிரியர் நலநிதியிலிருந்து ஒதுக்கப்பட்டு, இந்த உடல்பரிசோதனைக்கு ஆகும் செலவு அரசு ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்ட்டுள்ளது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி, பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துவக்கபள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் எண்ணிக்கை 37,588 ஆகும். அதில், 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,06,985 ஆகும். முதற்கட்டமாக […]

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கான கற்பித்தல் குறித்த பயிற்சி அந்தந்த பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இருந்து, ஆன்லைன் வழியில் நடத்த பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கான கற்பித்தல் குறித்த பயிற்சியானது, மாவட்ட, மாநில அளவில் சில பயிற்சி மையங்களில் வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. பயிற்சி பெறுவோர், உணவு, உறைவிட வசதிகளுக்காக, மையங்களில் […]

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வியை கருத்தில் கொண்டு ஆசிரியர் நல நிதியிலிருந்து ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிதியுதவியை ரூ.50,000 வரை உயர்த்தி வழங்கப்படும். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை; ஒவ்வொரு கல்வியாண்டிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வு பெற்ற, பணியில் இருக்கும்போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பிற்கு ரூ.5,000/-ம், பட்டயப்படிப்பிற்கு ரூ.2500/-ம் […]

பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதியம் உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 12,500 ரூபாயாக உயர்த்தியது தமிழக அரசு. நடப்பு மாதத்தில் இருந்து ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட (16,549) பல்வேறு சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருவது தெரிந்ததே. இவர்களின் […]

1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அட்டைகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மாநில அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், எண்ணும் எழுத்து திட்டம் படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளின் செயல்திறன் மற்றும் திறன், மனப்பான்மை உள்ளிட்ட குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் அடிப்படையில் மாணவர் அறிக்கை அட்டை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. […]

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன் கோரும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கையொப்பமிட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு. இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் தனது உத்தரவில்; ஆசிரியர்கள் பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன்பெற முடியாதவாறு ஒரு சில தலைமை ஆசிரியர்கள் கடன் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து கையொப்பம் இடுவதில்லை என […]

2023-2024 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் போது, நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும். இப்பண்பாடு தொடர்ந்து வருங்காலங்களிலும் செழித்தோங்கவும். மாநிலம் முழுவதும் 25 இடங்களில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை ஆணை வெளியிட்டது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு அரசு இசைக்கல்லூரிகளிலும், சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகளிலும், மாமல்லபுரம் அரசினர் கட்டட மற்றும் சிற்பக் […]

பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் தங்களின் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவையோடு சுடிதாரும் அணிந்து வரலாம். தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பலர் சேலை அணிந்து பணிபுரிய வேண்டும் என்பதில் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நடைமுறை, ஆசிரியர்கள் வசதியான ஆடைகளைத் தேர்வுசெய்ய அனுமதிக்கும் அரசு ஆணைக்கு முரணானது. எனவே சுடிதார் அணிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். […]

ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 10.03.2020 க்கு முன்னதாக உயர் கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெறாத ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கு நிதித்துறையின் ஒப்புதலைப் பெற்று வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆதி திராவிட நல இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில்; ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுள், 10.03.2020-க்கு முன்னதாக உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற்று வழங்கப்படாத இடைநிலை/பட்டதாரி உடற்கல்வி […]