Lok Sabha Election 2024: இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் மே 13ஆம் தேதியும், 5ஆம் கட்ட தேர்தல் மே 20ஆம் தேதியும், 6ஆம் கட்ட தேர்தல் மே 25ஆம் தேதியும் நடைபெற்றது. 18வது மக்களவைத் தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு உத்திர பிரதேசம், பீகார், ஒடிசா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று( ஜூன் 1ஆம் தேதி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி தற்போது நிறைவுபெற்றுள்ளது.
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை கொண்ட இண்டியா கூட்டணியும் மோதிக் கொள்கின்றன. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மூன்று முறை தொடர்ந்து பிரதமராக இருந்தவர் என்ற ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்து விடுவார். எனினும், இந்த முறை பாஜகவை வெற்றி பெற விடக்கூடாது என்ற முனைப்பில் இண்டியா கூட்டணி கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றியது.
இந்த நிலையில் தற்போது வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் சற்று நேரத்தில், தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகஉள்ளன. பல்வேறு செய்தி நிறுவனங்கள், தொலைக்காட்சிகள், ஏஜென்சிகள் இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடவுள்ளன. இதனால் இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளை தெரிந்துகொள்ள ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது.
Read More: EXIT POLL 2024 RESULTS : மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு!!