fbpx

விரைவில் டெல்லி – மும்பை இடையே மின்சார நெடுஞ்சாலை… நிதின் கட்கரி சொன்ன தகவல்..

டெல்லி மற்றும் மும்பை இடையே மின்சார நெடுஞ்சாலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

ஹைட்ராலிக் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர், அரசாங்கம் 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சுரங்கப் பாதைகளை அமைத்து வருவதாக தெரிவித்தார்.. மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கனரக வாகன உரிமையாளர்கள் எத்தனால், மெத்தனால் மற்றும் பச்சை ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் அனைத்து மாவட்டங்களையும் நான்கு வழிச் சாலைகள் மூலம் இணைக்க தனது அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது என்று கூறிய அமைச்சர், மாநில வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்… வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியாவிற்கு அனைத்து வகையான போக்குவரத்து வசதிகளும் தேவை என்றும், சீனா, ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவை ஒப்பிடுகையில், இந்தியாவில் தளவாடச் செலவு அதிகமாக உள்ளது என்றும் நிதின் கட்கரி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “டெல்லியில் இருந்து மும்பைக்கு மின்சார நெடுஞ்சாலையை உருவாக்குவதே எங்கள் திட்டம். தள்ளுவண்டியைப் போலவே, நீங்கள் டிராலிட்ரக்குகளையும் இயக்கலாம்,” என்று அவர் மேலும் விவரங்களை வழங்காமல் கூறினார். டிராலிபஸ் என்பது மேல்நிலை கம்பிகளில் இருந்து மின்சாரம் எடுக்கும் மின்சார பஸ் ஆகும். மின்சார நெடுஞ்சாலை என்பது பொதுவாக மேல்நிலை மின் கம்பிகள் உட்பட அதில் பயணிக்கும் வாகனங்களுக்கு மின்சாரம் வழங்கும் சாலையைக் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

வரும் 17-ம் தேதி நீட் தேர்வு நடைபெறுமா..? உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை...

Tue Jul 12 , 2022
எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் 2022 தேர்வு, ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும் […]

You May Like