fbpx

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா…..! காங்கிரஸ் திமுக உட்பட 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு….!

தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை வருகின்ற 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த நிலையில் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்காதது ஹிந்து தேசியவாதி வி.டி. சாவர்க்கரின் பிறந்த நாளான மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவது போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக 19 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

காங்கிரஸ் திமுக ஆம் ஆத்மி முத்தம் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ஜமாஜ்வாதி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, திரிணாமுல், காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம், கேரள மாநில காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய மாநாட்டு கட்சி மதிமுக, புரட்சிகர சோசியலிசக்கட்சி என்று ஒட்டுமொத்தமாக 19 கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமாக விளங்கக்கூடிய குடியரசு தலைவரை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு அழைக்காதது அவரை அவமதிப்பது மட்டுமில்லாமல், ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஒரு நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் இருக்கிறார் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அவர்தான் திறக்க வேண்டும். திறப்பு விழாவிற்கு அவர் தான் தலைமையில் ஏற்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

அடுத்த 9 நாட்களுக்கு தமிழக முதல்வர் யார்..? முக.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து சவுக்கு சங்கர் விமர்சனம்..!!

Wed May 24 , 2023
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளார்கள் மாநாட்டுக்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று சிங்கப்பூர் சென்றடைந்த முதல்வர் முக.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப், கேப்பிட்டாலாண்டு இன்வெஸ்ட்மென்ட் நிறுவன உயர் அலுவலர்களை தனித்தனியாக சந்தித்தார். தமிழ்நாட்டில் முதலீடு […]
அடுத்த 9 நாட்களுக்கு தமிழக முதல்வர் யார்..? முக.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து சவுக்கு சங்கர் விமர்சனம்..!!

You May Like