பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்.. அடுத்த வாரம் டெல்லி பயணம்…

பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார்..

சர்வதேச செஸ் போட்டியான, செஸ் ஒலிம்பியாட் முதன்முறையாக இந்த ஆண்டு சென்னையில் நடைபெற உள்ளது.. கொரோனா காரணமாக 2021-ம் ஆண்டு ஆன்லைனில் நடந்த இந்த போட்டியில் ரஷ்யாவும் இந்தியாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.. இந்த சூழலில் 2022-ம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ரஷ்யாவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.. ஆனால் உக்ரைன் மீதான போர் காரணமாக, இந்த ஆண்டுக்கான செஸ் போட்டியை ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது..

செஸ் ஒலிம்பியாட் என்றால் என்ன? சென்னைக்கு கிடைத்த பெருமை.. சிறப்பம்சங்கள்  என்ன? | What is chess Olympiad- Chennai to host 44th chess Olympiad -  myKhel Tamil

2022-ம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையில் இந்த போட்டி நடைபெற உள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை மாதம் 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை  நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.. இந்த சூழலில், நேற்று முன் தினம் முதலமைச்சர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.. கிட்டத்தட்ட 80% பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது..

இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார்.. சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க வருமாறு பிரதமரிடம் நேரில் அழைப்பு விடுக்க உள்ளார். ஜூலை 28-ம் தேதி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் பிரம்மாண்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

Maha

Next Post

தேர்தல் ஆணையத்துக்கு அடுக்கடுக்கான புகார்களை அனுப்பும் ஓபிஎஸ்..! கடந்து போகும் ஈபிஎஸ்..!

Thu Jul 14 , 2022
அதிமுகவில் தனது ஒப்புதல் இல்லாமல் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் புகார் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் இரு அணியினரும் சட்டரீதியான போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். குறிப்பாக துணை பொதுச்செயலாளர்கள், தலைமை நிலையச் செயலாளர்கள், 11 அமைப்புச் செயலாளர்கள், எம்.ஜி.ஆர். மன்ற மாநிலத் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை அறிவித்தார். இந்நிலையில், இந்த அறிவிப்புக்குப் […]
விரைவில் சந்திப்பு..!! பொறுத்திருந்து பாருங்கள்..!! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

You May Like