fbpx

வெறும் 87 ரூபாய்க்கு தினமும் 1 ஜிபி டேட்டா..!! ஏர்டெல், ஜியோவுக்கு டஃப் கொடுக்கும் BSNL..!!

தகவல் தொடர்பு நிறுவங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் புதிய புதிய ரீசார்ஜ் பிளான்களை போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டு வருகிறது. 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில், இந்த இரண்டு நிறுவங்களுக்கும் ஈடு கொடுக்கும் விதமாக BSNL புதிய ஒரு பிளானை அறிமுகம் செய்துள்ளது.

வெறும் 87 ரூபாய்க்கு தினமும் 1 ஜிபி டேட்டா..!! ஏர்டெல், ஜியோவுக்கு டஃப் கொடுக்கும் BSNL..!!

5ஜி ஓட்டத்தில் தகவல் தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் பிளான்களின் விலையையும் சரமாரியாக ஏற்றி வருகின்றன. ரூ.100-க்கு கீழ் பிளான் இல்லை எனும் நிலையில், 87 ரூபாய்க்கு ஒரு புதிய பிளானை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 87 ரூபாய் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினசரி 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் 14 நாட்களுக்கு கிடைக்கும். அதன்படி, இந்த திட்டம் உங்களுக்கு மொத்தம் 14 ஜிபி டேட்டவை வழங்கும். டேட்டா லிமிட் முடிந்த பிறகு, இன்டர்நெட்டின் வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும். இது தவிர, இந்த திட்டத்தில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த திட்டம் பயனர்களுக்கு ரூ.100-க்கும் குறைவான எஸ்எம்எஸ் வசதியை வழங்குகிறது. அத்துடன் இந்த திட்டத்தில் கூடுதலாக நீங்கள் ONE97 கம்யூனிகேஷன்ஸ் ஹார்டி கேம்ஸ் மொபைல் சேவையை பெறுவீர்கள்.

இப்போதுள்ள நிலையில், வெறும் அழைப்பு மற்றும் குறைந்த டேட்டா உள்ள பிளான் இருந்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு தனியாக பிளான் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இது கச்சிதமாகப் பொருந்தும். சென்னை மற்றும் தமிழ்நாடு பி.எஸ்.என்.எல். வட்டத்திற்கு இது தற்போது செயலில் உள்ளது. விருப்பம் உள்ளவர்கள், https://www.bsnl.co.in/ இணையதளத்திலும், கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகள் மூலமாகவும் ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்

Chella

Next Post

பெற்றோர்களுக்கு பயந்து டெல்லிக்கு ஓடிப்போன 16 வயது சிறுவன்…! காரணம் என்ன தெரியுமா…?

Thu Jan 5 , 2023
தமிழகத்தில் படிப்பை பொருத்தவரையில் அனைத்து விதத்திலும் பெண் குழந்தைகள் மிக சிறப்பாக விளங்கி வருகிறார்கள். ஆனால் ஆண் குழந்தைகளை பொறுத்தவரையில் பெண் குழந்தைகளுக்கு அப்படியே நேர் எதிராக இருக்கிறார்கள். காரணம் ஆண் குழந்தைகளுக்கு படிப்பில் பெரிய அளவில் ஆர்வமில்லை என்பதே உண்மை. அந்த வகையில், சென்னை வேளச்சேரியில் இருக்கின்ற பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவர் ஒருவர் கடந்த 2ம் தேதி பள்ளிக்கு சென்றார். அதன் […]
’கில்லி’ பட பாணியில் பெண் கேட்ட தாய் - மகன்..!! பிளஸ்1 மாணவியை கட்டாய திருமணம் செய்து கொடுமை..!!

You May Like