fbpx

அசத்திய இந்தியா…. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ருத்ராஎம்-II ஏவுகணை சோதனை வெற்றி…!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டிஆர்டிஓ, மே 29 அன்று ஒடிசா கடற்கரையில் இந்திய விமானப் படையின் சுகோய்-30 எம்கே-I விமானத்தில் இருந்து தரையில் உள்ள இலக்கை குறிவைத்து ஏவப்படும் ருத்ராஎம்-II – ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்தச் சோதனை, அதன் அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்தது.

ருத்ராஎம்-II – என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட திட-உந்துதல் ஏவுகணை அமைப்பாகும். இது பல வகையான எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. டிஆர்டிஓ ஆய்வகங்களால் உருவாக்கப்பட்ட பல அதிநவீன உள்நாட்டு தொழில்நுட்பங்கள் ஏவுகணை அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ருத்ராஎம்-II-ன் வெற்றிகரமான சோதனைக்காக டிஆர்டிஓ, இந்திய விமானப்படை ஆகியவற்றுக்கு வாழ்த்து தெரிவித்தார். வெற்றிகரமான சோதனையானது, ஆயுதப் படைகளுக்கு வலுசேர்க்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Vignesh

Next Post

ஜூன் 3ஆம் தேதி வானில் நிகழும் அதிசயம்..!! வெறும் கண்களில் பார்க்கலாம்..!!

Thu May 30 , 2024
The miraculous event of 6 planets aligning in the same direction happens on 3rd June. Scientists have said that we can see this with our naked eyes.

You May Like