fbpx

ஆண்களுக்கு 2 திருமணங்கள் கட்டாயம்..!! இல்லையென்றால் சிறை தண்டனை..? அதிரடி உத்தரவை பிறப்பித்த நாடு..!!

எரித்ரியா நாட்டின் ஆண்கள் குறைந்தது இரண்டு பெண்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

திடீரென்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகத் தொடங்கியது. ஆப்பிரிக்கா கண்டத்தில் இருக்கும் எரித்திரியா நாட்டைப் பற்றிய விவகாரம் தான் அது. இதுதொடர்பான பதிவில், எரித்ரியா நாட்டின் ஆண்கள் குறைந்தது இரண்டு பெண்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால், சிறை தண்டனை விதிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த பதிவு சில நாட்களாக வைரலாகி வருகிறது.

எரித்திரியா அரசாங்கம் ஏன் சட்டம் இயற்றியது?

எரித்திரியாவில் உள்நாட்டுப் போர் காரணமாக, ஆண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், ஆண்களை விட பெண்களின் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், 2 திருமணம் என்ற பழங்கால பாரம்பரியத்தை அங்கீகரித்து அதை சட்டமாக்கியுள்ளது என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த செய்தி பொய்யானது என தெரியவந்துள்ளது. பிபிசி அறிக்கையின்படி, 2 முறை திருமணம் செய்து கொள்ளாத ஆண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எரித்திரியா அரசாங்கம் எந்த சட்டத்தையும் இயற்றவில்லை.

எரித்திரியா போலவே ஈராக் மற்றும் சூடான் நாட்டிலும் இது போன்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக ஏற்கனவே சில பதிவுகள் வைரலாகின. ஆனால், அது போன்ற சட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உள்நாட்டு போர் நடைபெற்று வரும் நாடுகளை குறிவைத்து இது போன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. உள்நாட்டு போரால் மேற்சொன்ன நாடுகளில் மக்கள் தொகையில் பெரியளவில் முரண்பாடு இருப்பது உண்மை தான். அதற்காக, மக்கள் தொகையை சமன் செய்ய ஆக்கப்பூர்வமான வழிகளை அந்த நாடுகள் ஆலோசித்து வருகின்றன.

Chella

Next Post

மக்களே இன்று சிறப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Sat Oct 14 , 2023
தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அலுவலகங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில், ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, […]

You May Like