fbpx

KERALA| இல்லத்தரசி மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு.! கடன் பிரச்சனையால் இருவர் உடல் கருகி மரணம்.!

நிதி கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால், கேரளாவில்(KERALA) ஒரு நபர், பூட்டிய வீட்டிற்குள் இல்லத்தரசியின் மீது பெட்ரோலை(PETROL) ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அஞ்சல் பகுதியில், சிபிமோல் (37) தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். அவரது கணவர் உதயகுமார் வளைகுடாவில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பிஜு (47) என்பவர் சிபிமோலிடம் கடன் பெற்றிருந்தார். கடனை அவர் திருப்பி தராத நிலையில், சிபியின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மார்ச் மாதம் கடனை திருப்பித் தருவதாக பிஜு போலீசாரிடம் தெரிவித்தார். கடனை திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை 6.30 மணி அளவில் பெட்ரோலுடன் சிபிமோலின் வீட்டிற்கு பிஜு வந்துள்ளார். வரவேற்பறையில் அமர்ந்திருந்த அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கதவை தாழிட்டு பிஜு, அவரின் மீது பெட்ரோலை(PETROL) ஊற்றி, தீ வைத்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, மின்சாரத்தை துண்டித்தனர். அதற்குள் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் கருகி உயிர் இழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் உடல்கள், சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை அன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். சிபிமோலுக்கும், பிஜூவுக்கும் தலா 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

English summary: 2 people have been burnt alive and died due to debt issues in Kerala.

Read more: RAJASTHAN| கணவரால் சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம்.! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்.!

Next Post

Lok Sabha | ’நம்ம கேட்டத தரமாட்டாங்க போலயே’..!! நேரடியாக தலைமையை அழைத்து வரும் செல்வப்பெருந்தகை..!!

Tue Feb 27 , 2024
கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை திமுக கூட்டணியில் கொமதேக, கமல்ஹாசன் ஆகியோருக்கும் இடம் ஒதுக்க வேண்டியுள்ளது. தேமுதிகவும் கூட்டணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதனால் காங்கிரஸ் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்குவது எனவும், அதில் ஒன்றை கமல்ஹாசனுக்கு வழங்க வேண்டும் என்றும் திமுக தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருச்சி […]

You May Like