‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் கொண்டுவந்த 2 தனித் தீர்மானங்கள் சட்டப்பேரவையில் நிறைவேறியது.
தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் 3-வது நாளாக இன்று நடைபெறும் அமர்வில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற இரண்டு தனித் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்மொழிந்து உரையாற்றினார்.
பின்னர் இந்த தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற குரல் வாக்கெடுப்பின் அடிப்படையில், ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் கொண்டுவந்த தனித் தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.