சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே உள்ளது. இது போன்ற பாலியல் குற்றங்கள் வயது வரம்பின்றி,1 வயது குழந்தை முதல் வயதான பாட்டி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில், 13, 14 வயதான 4 நண்பர்கள் படித்து வருகின்றனர். ஒன்றாக பள்ளிக்கு சென்று வந்த நண்பர்கள், ஒரு கட்டத்தில் படிப்பை நிறுத்தி விட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நண்பர்கள் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து, கட்டிடப் பணிக்கு செல்லும் தங்களின் 15 வயது நண்பரை பார்க்க சென்றுள்ளனர். அங்கு நண்பர்கள் நான்கு பெரும், கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த நண்பரை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அங்குள்ள வீட்டில் 13 வயதான அக்கா மற்றும் 9 வயதான தங்கை என இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த நண்பர்கள் 5 பேருக்கும் அந்த சிருமிகள் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 5 பேரும் சேர்ந்து சிறுமிகள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதையடுத்து, சிறுமிகள் நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சம்பவம் குறித்து ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர்.