+2 பொதுத்தேர்வில் ஆப்செண்ட்டான மாணவர்களை கண்டறிந்து, ஜூலையில் +2 துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்..
+2 மாணவர்கள் 50,000 பேர் பொதுத்தேர்வு எழுதாதது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.. இதுகுறித்து பேசிய அவர் “ கொரோனாவால் பள்ளிக்கல்வித்துறை மட்டுமல்ல அனைத்து துறைகளும் மாற்றம் அடைந்துள்ளது.. கொரோனாவால் 2021 காலக்கட்டத்தில், 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களே தற்போது தேர்வு எழுதுகின்றனர்.. அதாவது இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதி வரும் மாணவர்கள் 2020-ல் கொரோனா காரணமாக ஆல் பாஸ் ஆனவர்கள்.
நீண்ட காலம் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு வரவழைத்தோம்.. இடையில் நின்ற 1.90 லட்சம் மாணவர்களில் 78,000 பேரை தொடர்ந்து கண்காணித்து தேர்வு எழுத வைத்தோம்.. ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் வட்டார வளமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைத்து, பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிவதற்கான வழிவகை மேற்கொள்ளப்படும்.. துத்தேர்வு எழுதாத மாணவர்களின் பட்டியல் பள்ளி மேலாண்மை குழுவுடன் பகிரப்படும்.. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஜூலை மாதம் நடைபெற துணை தேர்வுக்கான ஆலோசனை வழங்கப்படும்..
துணை தேர்வு குறித்து மாணவர் மற்றும் பெற்றோரின் சந்தேககங்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள 14417 இலவச உதவி மைய எண்ணை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.. வரும் கல்வியாண்டில் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.. வாரத்தில் 3 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் இனி கண்காணிக்கப்படுவார்கள்..” என்று தெரிவித்தார்.