100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த இரண்டு வயது சிறுமியின் பாதுகாக்கப்பட்ட உடல், ‘உலகின் மிக அழகான மம்மி’ என்று அழைக்கப்படுகிறது.
ரோசாலியா லோம்பார்டோ என்ற குழந்தை, டிசம்பர் 2, 1920 அன்று தனது இரண்டாவது பிறந்தநாளுக்கு முன்பே உயிரிழந்தது. 1918 முதல் 1920 வரையிலான ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோயால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக அந்த குழந்தை இறந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதையடுத்து இத்தாலில் வடக்கு சிசிலியில் உள்ள பலேர்மோவின் கபுச்சின் கேடாகம்ப்ஸில் அவரது உடல் பாதுகாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. 100 ஆண்டுகளுக்குப் பிறகும் அது அப்படியே இருக்கிறது.
ரோசாலியாவின் உடல், சுற்றுச்சூழல் காரணிகளால் உடல் மோசமடைவதைத் தடுக்க நைட்ரஜன் நிரப்பப்பட்ட கண்ணாடி பெட்டிக்குள் உள்ளது. கபுச்சின் கேடாகம்ப்ஸ் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. மாறியுள்ளது, ஏனெனில் ரோசாலியாவின் உடல் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும் குறிப்பிடத்தக்க வகையில் பாதுகாக்கப்படுகிறது. கபுச்சின் கேடாகம்ப்ஸில் சுமார் 8,000 மம்மிகள் உள்ளன. ஆனால் ரோசய்யாவைப் போல யாரும் பாதுகாக்கப்படவில்லை.
100 ஆண்டுகளுக்குப் பிறகு ரோசலியாவின் எலும்பு அமைப்பு மற்றும் உறுப்புகள் அப்படியே இருப்பதை ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே உறுதி செய்துள்ளது. எனினும் சிறுமியின் மூளை மட்டும் அதன் அசல் அளவிலிருந்து 50 சதவீதம் சுருங்கி விட்டது என்று கூறப்படுகிறது.. ஆனாலும் சிறுமியின் உடல் பதப்படுத்தப்பட்டது குறித்து பலரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..