fbpx

பெண்களுக்கு இனி ’Heart Emoji’ அனுப்பினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை..!! அதிரடியாக அமலுக்கு வந்தது புதிய சட்டம்..!!

சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு ’ஹார்ட் எமோஜி’ (Heart Emoji) அனுப்பினால் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை சவுதி மற்றும் குவைத் அரசுகள் இயற்றியுள்ளன.

வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நம் உணர்வுகளை கீபேட் வழியாக வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு எமோஜிக்கள் இடம்பெற்றுள்ளன. அதில், முக்கியமானது ஹார்ட் எமோஜி. காதலர்கள், தம்பதிகள், நண்பர்கள் தங்களுக்குள் அன்பை பரிமாறிக் கொள்ள இந்த எமோஜியை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், இந்த ஹார்ட் எமோஜியை அறிமுகமில்லாத பெண்களுக்கோ அல்லது துஷ்பிரயோகம் செய்யும் நோக்கிலோ அனுப்பினால் சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் புதிய சட்டம் ஒன்றை குவைத் அரசு இயற்றியுள்ளது. இதற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 2000 தினார் (ரூ.5,37,800) அபராதமும் விதிக்கப்படும்.

இதே போன்று, குவைத்தின் அண்டை நாடான சவுதியிலும் 2 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரியால் (ரூ.22 லட்சம்) அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதனைச் செய்தால் அபராதம் 3 லட்சம் ரியால் வரை அதிகரிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் எண்ணிக்கை அதிகரிப்பு.. இதன் பின்னணி என்ன.??

Thu Aug 3 , 2023
குழந்தை சுகப் பிரசவத்தில் பிறந்தால் நன்றாக இருக்கும் என்பது பெரும்பாலானோரின் எண்ணமாக இருக்கிறது. சிசேரியன் செய்தால் அதனால் ஏற்படும் வலி காலத்திற்கு தொடரும். அதுமட்டுமின்றி பணத்தை வசூலிக்கவும் இப்படியான நிகழ்வுகள் அரங்கேறுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. சிசேரியனில் தாய், சேய் என இருவரும் நலமுடன் இருப்பார்கள் என்பது உறுதி செய்யப்படும். இந்த சூழலில் தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் புள்ளிவிவரங்களில் முக்கியமான ஒரு விஷயம் தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த நிதியாண்டில் அரசு […]

You May Like