கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நர்சிங் மாணவியை மது குடிக்க வைத்து, அவரது நண்பர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதைக் கவனித்த கல்லூரி நிர்வாகம், அவருக்கு கவுன்சிலிங் நடத்தியபோதுதான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. விசாரணையில், நர்சிங் மாணவியை, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தங்கள் வாடகை வீட்டிற்கு அழைத்துள்ளனர். அப்போது, அங்கு சென்ற மாணவியை மது குடிக்க வற்புறுத்தி உள்ளனர். பின்னர், மாணவி போதையில் இருப்பதை உறுதி செய்ததோடு, அவரை அந்த இளைஞர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர், அந்த மாணவியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு குற்றம் சாட்டப்பட்டவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சுயநினைவு திரும்பியதும், மாணவி தனது நண்பருக்கு தகவல் கொடுத்தார் என்றும் பிறகே அவர் அந்த இடத்தில் இருந்து அவர் தப்பித்தார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு குற்றவாளிகளும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.