fbpx

யூடியூபில் 20,00,000 வீடியோக்கள் நீக்கம்..!! உங்க வீடியோவும் இந்த லிஸ்ட்ல இருக்கானு பாருங்க..!!

டெல்லியில் நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா 2023 நிகழ்ச்சியின்போது பேசிய யூடியூப் இந்தியாவுக்கான அரசு விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கைத் தலைவரான மீரா சாட், ’யூடியூப் விதிகளை மீறும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்ட 20 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீக்கப்பட்ட பெரும்பாலான வீடியோக்கள் 10-க்கும் குறைவான பார்வைகளை மட்டுமே கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், யூடியூபின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக, வரும் மாதங்களில் இந்தியாவில் ‘வாட்ச் பேஜ்’ என்ற புதிய அம்சத்தை டியூபில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இந்த அம்சம் பயனர்களுக்கு நம்பகமான செய்திகளை மட்டுமே பரிந்துரைக்கும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோக்கள் நீக்கம் குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள யூடியூப் இந்தியா நிர்வாகம், இந்தியாவில் கடந்த ஏப்ரல் – ஜூன் வரை, உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்ட மற்றும் கொள்கை வழிகாட்டுதலின் படி பதிவேற்றம் செய்யப்படாத 20 லட்சம் யூடியூப் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும், இயந்திரக் கற்றல் முறை மற்றும் மனிதர்களை பயன்படுத்தி தொடர் கண்காணிப்பு மூலம் இதனை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

Chella

Next Post

பெரும் பதற்றம்: தரைவழி தாக்குதலுக்கு தயாராகிய இஸ்ரேல்!… எல்லையில் படைகள் குவிப்பு..!

Sat Oct 21 , 2023
காசா மீது தரை வழித்தாக்குதலுக்கு இஸ்ரேல் முழுமையாக தயாராகி விட்டதாகவும் இதற்காக லெபனான் எல்லை பகுதியில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் உக்கிரத்தை எட்டி உள்ள நிலையில் காசா பகுதியில் வாழும் 11 லட்சம் மக்கள் வெளியேற இஸ்ரேல் அவகாசம் வழங்கியது. அதை தொடர்ந்து நேற்று காசா மீது சரமாரி குண்டுமழையை இஸ்ரேல் போர் விமானங்கள் பொழிந்தன. இந்தநிலையில், காசா […]

You May Like