தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் சென்ற வருடம் இரண்டு நாட்களில் 431 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. இந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.
எனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் நாள் 200 கோடியும், தீபாவளி அன்று 200 கோடியும் ஆக மொத்தம் 400 கோடிக்கு மது விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே டாஸ்மாக் கடைகளில் தேவையான அளவு மதுபானங்களை ஏற்பாடு செய்ய வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் டாஸ்மாக் கடைகளுக்கு தேவையான சரக்குகளை கொடுக்க முடியாமல் செல்ல கூடாது என்று இப்போதே அதற்கு தேவையான ஏற்பாடுகளை டாஸ்மாக் நிர்வாகம் தீவிரமாக செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.