fbpx

2023 சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று!… சிறப்புத் தொகுப்பு இதோ!

அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இது குறித்தான சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.

ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த சர்வதேச தினம் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான ஐ.நா-வின் சர்வதேச தினமாகும். இது கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 26 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. மனித சமூகத்திற்கு போதை பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

ஐ.நா பொதுச்சபை (UNGA) ஜூன் 26-ம் தேதியை 1987 டிசம்பரில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக அறிவித்தது. தவிர இந்த நாள் சீனாவின் குவாங்டாங்கில் உள்ள ஹுமேன், ஓபியம் வர்த்தகத்தை அகற்றுவதற்கான லின் ஜெக்ஸுவின் முயற்சிகளை நினைவுகூறும் விதமாகவும் அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் போதை பொருட்களின் பயன்பாடு, போதை பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை மிகப்பெரிய முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதை அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 30 கோடிக்கும் மேற்பட்டோர் போதை பொருட்களுக்கு அடிமையாக இருக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமான ஜூன் 26 போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை அகற்றவும், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தைத் தூண்டும் கட்டமைப்பு காரணங்களை அகற்ற விழிப்புணர்வை தூண்டவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை பயன்படுத்தும் நபர்கள் ஒரு கட்டத்தில் அதனலாலேயே பலியாகின்றனர். ஆனால் தேவையான விழிப்புணர்வு இல்லாததால் அவர்களை மீட்பது கடினமாகிறது. இந்நிலையில் “உயிர்களைக் காப்பாற்ற போதைப்பொருட்கள் பற்றிய உண்மைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்பதே போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான 2021 சர்வதேச தினத்தின் தீம் ஆகும். போதைப்பொருள் பற்றிய தீமைகளை எடுத்துரைப்பதோடு, போதை மருந்து பயன்படுத்துவதால் ஏற்படும் கேடுகள் குறித்த உண்மைகளை மக்களுக்கு கொண்டு செல்வதை இந்த தீம் நோக்கமாக கொண்டது.

இதில் சுகாதார அபாயங்கள் முதல் உலகளாவிய போதை மருந்து பிரச்சனைக்கான தீர்வுகள், ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட தடுப்பு நடவடிக்கைகள், போதை பயன்பாட்டாளர்களின் மறுவாழ்வு மற்றும் போதை பழக்கத்தை கைவிட்ட பிறகான பராமரிப்பு உள்ளிட்டவையும் அடங்கும். மேலும் இந்த பிரச்சாரம் ஐ.நா வின் போதைப்பொருள் மற்றும் குற்றத்தின் ஆண்டு உலக மருந்து அறிக்கையிலிருந்து (Drugs and Crime’s annual World Drug Report) குறிப்பிடத்தக்க சில உண்மை தரவுகளையும் முன்வைக்கிறது. இந்த தரவுகள் அனைவருக்கும் ஆரோக்கியம் குறித்த விஞ்ஞான பார்வையை அடைய தற்போதைய உலகளாவிய போதை மருந்து பயன்பாடு நெருக்கடியை குறைக்க, உண்மை மற்றும் நடைமுறை பதில்களையும் முன்வைக்கிறது.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமானது தனிநபர்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் டீனேஜ் வயதினரிடையே போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார தீமைகள் மற்றும் சமுதாய சீர்கேடு பற்றி பொறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. உலகெங்கிலும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் அபாய விளைவுகள் குறித்து எடுத்து கூறும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

Kokila

Next Post

தூள்...! 12-ம் வகுப்பு மாணவர்களே...!நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "கல்லூரி கனவு புத்தகம்"...! முழு விவரம் இதோ...

Mon Jun 26 , 2023
நான் முதல்வன் – 2023-24ஆம் ஆண்டிற்கான கல்லூரி கனவுப் புத்தகம் வழங்குதல் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி முதலமைச்சர் அவர்களால் 25.06.2022 அன்று ‘ கல்லூரிக் கனவு ‘ என்னும் பெயரில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் , 2023-2024 கல்வி ஆண்டிற்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. அதன் படி, கீழ் கண்டவாறு […]

You May Like