பூமிக்கு அருகாமையில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஒரு விண்கல் அல்லது சிறு கோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம். சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலான ஒரு பகுதி முக்கிய சிறுகோள் இருந்தாலும், அவை ஒரே அளவிலும் வடிவத்திலும் இல்லை.. ஏனெனில் அவை சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. அவை கிரகங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.

அந்த வகையில் கடந்த ஆண்டு பல விண்கற்கள் பூமியை கடந்து சென்றதாக நாசா தகவல் வெளியிட்டது.. இந்த நிலையில் இந்த ஆண்டும் பல்வேறு விண்கற்கள் பூமியை நெருங்கி வருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வானியலாளர்கள் ஒரு பிரம்மாண்டமான விண்கல் பூமியை நோக்கி வரவுள்ளதாக எச்சரித்துள்ளனர், இது ஜூலை 17 அன்று பூமிக்கு மிக அருகில் வர உள்ளது.
2022 KY4 என பெயரிடப்பட்ட இந்த விண்கல் கிட்டத்தட்ட 50 மாடிகள் கொண்ட வானளாவிய கட்டிடத்தின் அளவு கொண்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.. இது சுமார் 290 அடி அகலம் கொண்டது என்றும், இந்த விண்கல் சுமார் 100 ஆண்டுகளில் நமது கிரகத்தை நோக்கி மிக அருகில் வருகிறது என்று கூறப்படுகிறது..
இந்த விண்கல், கிட்டத்தட்ட 6.1 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் கடந்து செல்லும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்… இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான சராசரி தூரத்தை விட அதிகம் என்று நாசா தெரிவித்துள்ளது.. எனவே இந்த விண்கல் பூமியை கடப்பதால் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதனிடையே நாசா போன்ற விண்வெளி ஏஜென்சிகள் கோள்களின் பாதுகாப்பில் எப்போதும் கவனம் செலுத்துகின்றன. NASA ஆனது ஒரு சிறுகோள்-திருப்பல் விண்கலத்தை 2021 நவம்பரில் அறிமுகப்படுத்தியது – இரட்டை சிறுகோள் திசைதிருப்பல் சோதனை (DART). இந்த விண்கலம் இந்த ஆண்டு 525 அடி அகலமுள்ள சிறுகோள் Dimorphos மீது நேரடியாக மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த மோதல் விண்கல்லை அழிக்காது என்றாலும், அது அதன் சுற்றுப்பாதை பாதையை சிறிது மாற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது..