fbpx

2024 நியூமராலஜி.! பிறந்த தேதியால் கொட்டப் போகும் அதிர்ஷ்டம்.!

வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டு புது வருடம் ஒவ்வொருவருக்கும் சிறப்பான ஆண்டாக வரவேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒருவரது வாழ்வில் நல்ல நேரம் மற்றும் கெட்ட நேரங்கள் அவர் பிறந்த நேரம் மற்றும் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைவதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. பிறந்த தேதி அவரது கிரகணங்களின் அமைப்பு மற்றும் ராசிகளின் அடிப்படையில் அவருக்கான பாதையை உருவாக்குகிறது. இதில் எண் கணிதம் என்று சொல்லப்படும் நியூமராலஜி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த எண் கணிதத்தின் பிறந்த தேதியால் புது வருடத்தில் அதிர்ஷ்டம் அடிக்க போகும் ஐந்து எண்களை காண்போம்.

வர இருக்கின்ற புத்தாண்டில் ஒன்றாம் தேதியை பிறந்த தேதியாக கொண்டவர்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைய இருக்கிறது. இவர்களுக்கு திருமண வாழ்க்கையில் பல வெற்றிகளும் திருமண தடைகளும் நீங்கும். செல்வம் மற்றும் தொழில் வாய்ப்பிலும் சிறப்பான அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. நியூமராலஜி படி சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்ட சில எதிர்மறை காரணங்கள் இருப்பதால் கல்வி தொழில் வாய்ப்பில் சில தடங்கல்கள் வரலாம் எனினும் 2024 ஆம் ஆண்டிற்குள் அதுவும் முறியடிக்கப்பட்டு வெற்றி கிட்டும்.

மூன்றாம் தேதியை பிறந்த தேதியாக கொண்டவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கிறது. இவர்களுக்கு திருமண உறவில் நீண்ட மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குடும்ப உறவுகளுக்கு இடையேயான நெருக்கம் அதிகரிக்கும். மேலும் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். எனினும் இந்த தேதியில் பிறந்தவர்கள் தங்களது வழிமுறைப்படி ஒரு விஷயங்களை செய்ய நினைப்பார்கள் அது தொழில் மற்றும் கல்வி வாய்ப்பில் தொல்லைகள் ஏற்படுத்தலாம். எனினும் நியூமராலஜி படி அதற்குரிய பரிகாரங்களை செய்தால் 2024 இவர்களுக்கு மிகச் சிறப்பான ஒரு ஆண்டாக அமையும்.

ஏழாம் தேதி பிறந்தவர்களுக்கு வர இருக்கின்ற ஆண்டு சிறப்பானதாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும் என எண் கணித ஜோதிடம் தெரிவிக்கிறது. இவர்களுக்கு தொழிலில் பல வாய்ப்புகள் தேடி வருவதோடு வெற்றியும் அமையும். தொழில் வெற்றியில் பொருளாதாரம் உயரும். மேலும் நேர்மறை சிந்தனைகளால் குடும்பத்தில் அமைதி நிலவுவதோடு மகிழ்ச்சியும் பெருகும். ஆனால் ஆண்டின் நடுப்பகுதியில் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளில் சில தடுமாற்றங்கள் ஏற்படலாம். அவற்றிற்கான பரிகாரங்களை செய்து கடந்து விட்டால் ஏழாம் தேதியை பிறந்த தேதியாக கொண்டவர்களுக்கு 2024 ஒரு மிகச் சிறப்பான ஆண்டாக அமைய இருக்கிறது .

Next Post

காய்ச்சலில் ஏற்படும் வாய் கசப்புக்கு சாப்பிடும் ஆல்பக்கோடா பழம்.! உடல் எடையை குறைக்க உதவுமா.?

Wed Dec 20 , 2023
பழ வகைகள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒன்றாகும். அவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பழங்கள் பொதுவாக சாப்பிட்டு வந்தாலும் சில பழங்கள் மருந்தாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் ஆல்பக்கோடா பழம். பிளம்ஸ் வகையைச் சார்ந்த இந்த பழம் காய்ச்சல் நேரத்தில் ஏற்படும் வாய் கசப்பை போக்குவதற்கும் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கும் சாப்பிடக்கூடியதாகும். எனினும் இந்த பழங்கள் மற்ற நேரங்களிலும் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்களை உள்ளடக்கி […]

You May Like