fbpx

நாஸ்டர்டாமஸின் கணிப்பு பலித்தது! 2024 பிறந்ததும் நிகழ்ந்த அந்த கோர சம்பவம்!… அடுத்து என்ன நடக்கும்?

2024 பிறந்து சில மணி நேரத்தில் நாஸ்டர்டாமஸின் கணிப்புகளில் ஒன்றான அந்த கோர சம்பவம் பலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு தத்துவஞானியான நாஸ்டர்டாமஸ், ஜேர்மனியின் அடால்ஃப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் 2019ல் கோவிட் தொற்றுநோய் தொடர்பிலும் துல்லியமாக கணித்த பெருமைக்குரியவர். தற்போது புத்தாண்டில் ஜப்பான் நாட்டை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம் தொடர்பிலும் அவர் கணிப்பு நிறைவேறியுள்ளதாக கூறப்படுகிறது. 7.6 ரிக்டர் அளவில் பதிவான அந்த நிலநடுக்கத்தில் சிக்கி, இதுவரை 62 பேர் பலியாகியுள்ளனர்.

நாஸ்டர்டாமஸ் தமது 2024 குறித்த கணிப்பில், வறண்ட பூமி மேலும் வறண்டு, பெரும் வெள்ளம் ஏற்படும் என குறிப்பிட்டிருந்தார். மேலும், மிக மோசமான நிலநடுக்கத்திற்கு பிறகு பேரலை மொத்தமாக நிலப்பரப்பை சூழும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2024ல் சீனாவுடன் மோதல் ஏற்படும் என்றும், அரச குடும்பம் ஒன்றில் குழப்பம், கலக்கம் ஏற்படும் என்றும் காலநிலை மாற்றத்தால் பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்றும் கணித்துள்ளார்.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. உயிர் பிழைத்தவர்கள் தெருக்களில் கடும் குளிரை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தற்போது சடலங்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சில இடங்களில் 3 அடிக்கு மேல் அலைகள் எழும்பின என்பது குறிபிடத்தக்கது.

Kokila

Next Post

இன்று கைதாகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்..? உறுதி செய்த ஆம் ஆத்மி அமைச்சர்கள்..!! அரசியலில் பரபரப்பு..!!

Thu Jan 4 , 2024
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய பிறகு, இன்று (ஜனவரி 4) காலை அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் கிடைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அனுப்பிய 3-வது சம்மனை கெஜ்ரிவால் தவிர்த்துவிட்டதை அடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லி சட்டத்துறை […]

You May Like