ஜனவரி 2025, இதுவரை பதிவானதிலேயே மிகவும் வெப்பமான ஜனவரி மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல பகுதிகள் குளிர்ந்த வெப்பநிலையையும் குளிர்காலக் குளிரையும் அனுபவித்தாலும், கிரகம் தொடர்ந்து வெப்பமாகவே இருந்தது, கடந்த கால சாதனைகளை முறியடித்தது.
ஐரோப்பிய பருவநிலை மாற்றத்துக்கான முகமையின் தகவலின்படி, லா நினோ எனும் பருவநிலை முறையின் படி பொதுவாக ஜனவரி மாதம் சர்வதேச அளவில் குளிரான சூழலையை கொண்டிருக்கும் ஆனால், அதற்கு மாறாக கடந்த மாதம் மிகவும் வெப்பமான ஆண்டாக புவி முழுவதும் உணரப்பட்டது. இந்த மாதத்திற்கான உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்று வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 1.75° செல்சியஸை எட்டியுள்ளது.
காப்பர்நிக்கஸ் பருவநிலை மாற்ற சேவைகள் அமைப்பின் தகவலின்படி, நடப்பு ஆண்டின் ஜனவரி மாதம் சராசரியாக 13.23 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரித்திருந்தது. 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நிலவிய வெப்பமயமான மாதத்தைக் காட்டிலும் 0.09 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்தது.
கடந்த ஜூலை மாதம் பசிபிக் பெருங்கடலில் நிலைமை மாறத் தொடங்கின. கடல் நீரின் மேல் அடுக்கு வழக்கத்தை விட வெப்பமாக இருந்தது. இந்த நிலையை எல் நினோ என்று வானிலை ஆய்வாளர்கள் அழைக்கின்றனர் கொடூரமான வெப்ப அலை கிட்டத்தட்ட அனைத்து இந்தியாவையும் வாட்டியது. குறைந்தது மூவாயிரம் பேர் வெப்ப பக்கவாதத்தால் இறந்தனர். 2025 இல் வெப்பநிலை 2024 ஐ விட அதிகமாக இருக்கலாம் என்று சில வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கலிபோர்னியா காட்டுத்தீ 9 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடை வெளியிட்டு, உலகம் முழுவதையும் பாதித்தது குறிப்பிடத்தக்கது.