fbpx

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுது..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

டிசம்பர் 31ஆம் தேதி தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வரும் 31ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, தென்காசி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, விருதுநகர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அஞ்சலக ஆயுள் காப்பீட்டு நேரடி முகவர்களுக்கான நேர்முக தேர்வு...!

Fri Dec 29 , 2023
சென்னை அண்ணாசாலை தலைமை தலைமை அஞ்சல் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் தகுதியைப் பெற்றிருப்பின் முதன்மை அஞ்சல் தலைவர் அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 20.01.2024 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18-லிருந்து 50 வரை இருக்க வேண்டும். சுய […]

You May Like