சேலம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பட்டயப் படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு வேலை வாயப்புடன் கூடிய தொழில்துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி NTTF நிறுவனத்தின் மூலம் வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த 18 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 6மாதம் ஆகும். மேலும் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணாக்கர்க ளுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் (SSC and NSDC Approval Certificate) அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்ப கால மாதாந்திர ஊதியமாக பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.16,000/- முதல் ரூ.21,000/- வரையிலும், பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.21,000/- முதல் ரூ.25,000/- வரையிலும் பெறலாம். மேலும் புகழ்பெற்ற தனியார் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் தாட்கோ www.tahdco.com இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.