fbpx

ஜூன் 21ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

சென்னையில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையங்கள் சார்பில் ஜூன் 21ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வரும் ஜூன் 21ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் 8, 10, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இதில், 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து தண்ணீருக்கான கட்டணமும் அதிரடியாக உயருகிறது..!! மக்கள் அதிர்ச்சி..!!

English Summary

It has been announced that an employment camp will be held on June 21 by employment and career guidance centers in Chennai.

Chella

Next Post

ஓய்வூதியம் பெறுபவர்கள் கவனத்துக்கு...!! வீட்டில் இருந்தே வாழ்நாள் சான்றிதழ் அளிக்கலாம்.. வழிமுறை இதோ!!

Wed Jun 19 , 2024
Pensioners have to submit the Jeevan Brahman certificate every year at the bank or post office. What is Jeevan Brahman certificate and how to submit it can be seen in this post.

You May Like