fbpx

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் ரூ.234.75 கோடி சொத்துக்கள் முடக்கம்..! என்ன காரணம் தெரியுமா?

சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.234 கோடியே 75 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சென்னை தியாகராய நகரில் இயங்கி வந்த சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனம் கடந்த 2017ஆம் தேதி இந்தியன் வங்கியில் ரூ.240 கோடி கடன் பெற்றது. இந்த கடனை முறைகேடாக பெற்று மோசடி செய்துள்ளதாக வங்கியின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கே.எல்.குப்தா சிபிஐ-யிடம் புகார் அளித்தார். அதன்பேரில் பங்குதாரர்கள் சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே, இந்தியன் வங்கியில் பெற்ற கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.480 கோடி ஆனது.

Saravana Stores: வரி ஏய்ப்பு: சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கடையில் அதிகாரிகள்  சோதனை - gst officials raid in saravana stores in chennai | Samayam Tamil

இதையடுத்து இந்தியன் வங்கி தரப்பில் சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனத்துக்கு சொந்தமான 2 கடைகளின் பொருட்களை ஜப்தி செய்து, கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 2 கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. சொத்துகள் முடக்கம், பண மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.234 கோடியே 75 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

Chella

Next Post

விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்பு செட்டுகள்‌ அமைக்க கூடுதலாக 20 சதவீத மானியம்...! உடனே இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்...!

Sun Jul 3 , 2022
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசு வேளாண்மை பொறியியல்‌ துறையின்‌ மூலம்‌ முதலமைச்சரின்‌ சூரிய சக்தி பம்பு செட்டுகள்‌ திட்டத்தின்‌ கீழ்‌ மின்‌ இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 திறன்‌ வரையிலான மின்கட்டமைப்புடன்‌ சாராத தனித்து சூரிய சக்தியால்‌ இயங்கும்‌ பம்பு செட்டுகள்‌ 70 சதவீத மானியத்தில்‌ அமைக்கும்‌ திட்டம்‌ ( 40 சதவீதம்‌ தமிழக அரசின்‌ மானியம்‌ மற்றும்‌ […]

You May Like