fbpx

57 வயது நடிகரை பிரிந்த 25 வயது காதலி..!! உறுதி செய்த ஷீத்தல்..!!

நடிகர் பப்லுவும் அவரை விட 30 வயது குறைவான ஷீத்தலும் காதலித்து வந்த நிலையில், தற்போது இருவரும் பிரிந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் ஷீத்தலும் அந்த ஒரு விஷயத்தை செய்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு சினிமாவில் வில்லனாக வலம் வந்தவர் பப்லு என்ற பிருத்விராஜ். இவருக்கு முதலில் ஒரு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தில் மகன் ஒருவர் ஆட்டிசம் குறைபாட்டோடு பிறந்தார். இதன் பிறகு பிருத்விராஜ்க்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

இதனையடுத்து தனித்து வாழ்ந்து வந்த 57 வயதாகும் பப்லு, சில மாதங்களுக்கு முன்பு 25 வயதாகும் ஷீத்தல் என்ற பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தனர். தனது மகன் வயதில் இருக்கும் பெண்ணுடன் பப்லுவுக்குத் திருமணமா என பல விமர்சனங்கள் வந்தாலும் அதை தாங்கள் பொருட்படுத்தவில்லை எனவும் இந்த ஜோடி கூறியது.

பப்லுவை விட ஷீத்தல் 30 வயது குறைவானவர். இந்நிலையில், தற்போது ஷீத்தல் பப்லுவை பிரிந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில் அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஜோடியாக இருந்த புகைப்படங்களையும் நீக்கி இருக்கின்றனர். ‘பிரிந்துவிட்டீர்களா’ என நெட்டிசன் ஒருவர் கமெண்ட்டில் கேட்டிருக்கும் கேள்வியையும் ஷீத்தல் லைக் செய்திருக்கிறார். அதனால் அவர்கள் பிரிந்தது உறுதியாகியுள்ளது. மேலும், தனது பிறந்த நாளையும் ஷீத்தல் இல்லாமல் பப்லு தனியாகக் கொண்டாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

2 ஆண்டுகளுக்கு முன் மரணம்..!! இறுதிச் சடங்கு செய்த குடும்பம்..!! மீண்டும் திரும்பி வந்ததால் விநோத சடங்கு..!!

Sat Dec 2 , 2023
உத்தரகாண்ட் மாநிலம் கதிமா நகரம், ஶ்ரீபூர் பிச்வா பகுதியைச் சேர்ந்தவர் நவீன் சந்திர பட் (42). இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நவீன் சந்திர பட், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதால் அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். அப்போது, சம்பாவத் பகுதியின் பன்பசா நதிக்கரையோரம் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டது. அது காணாமல்போன நவீன் சந்திர பட் போல் இருந்ததால், அவர்தான் […]

You May Like