சரியான நேரத்தில் காவல்துறையை அனுப்பிய முதல்வருக்கு பாராட்டு..! – ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி

அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரம் நடந்தபோது சரியான நேரத்தில் காவல்துறையை அனுப்பி அதிமுகவினரின் உயிரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காப்பாற்றியுள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி, ”அதிமுகவில் மிக மூத்தவரான பொன்னையன் பல உண்மைகளை அந்த ஆடியோவில் பேசியிருப்பதாக தெரிவித்தார். தனக்கு வரக்கூடிய மிரட்டல்களால் ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என பொன்னையன் மாற்றிப் பேசுவதாகவும் புகழேந்தி கூறினார். முன்னாள் அமைச்சர் பொன்னையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்று கூறிய புகழேந்தி, பொன்னையன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஓபிஎஸ் செம்ம ஜால்ரா..!ஏறி அடித்த புகழேந்தி.. வேடிக்கை பார்த்த ஓ.ராஜா..

அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரம் நடந்தபோது சரியான நேரத்தில் காவல்துறையை அனுப்பி வைத்து அதிமுக-வினரின் உயிர்பலி நிகழாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாத்துள்ளதாக புகழேந்தி பாராட்டு தெரிவித்தார். விசுவாசத்தின் பிறப்பிடமாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதாகக் கூறிய புகழேந்தி, ஓபிஎஸ்-க்கு இன்னொரு முகம் உண்டு என்றும், சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்றும், எடப்பாடி தரப்பினரை எச்சரித்தார்.

Chella

Next Post

வரும் ஜூலை 15-ம் தேதி முதல்... 75 நாட்களுக்கு இலவசம்...! 18 வயது மேற்பட்டவர்ளுக்கு மட்டும்... மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு...!

Thu Jul 14 , 2022
நாளை முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளின் இலவச பூஸ்டர் மருந்துகள் அரசு தடுப்பூசி மையங்களில் நாளை முதல் 75 நாட்களுக்கு கிடைக்கும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். […]

You May Like