புற்றுநோயை உண்டாக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக அத்தியாவசிய மருந்து பட்டியலில் இருந்து பிரபலமான ஆன்டாக்சிட் சால்ட் ரானிடிடைன் மாத்திரையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
384 மருந்துகளைக் கொண்ட புதிய தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலை சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று வெளியிட்டது. அதில் ஆன்டாக்சிட் சால்ட் ரானிடிடைனை மத்திய அரசு நீக்கியுள்ளது. 26 மருந்துகள் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இந்த மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.. இதையடுத்து இந்த மருத்துகள் அத்தியாவசிய மருந்து பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன..
ரானிடிடின் மருந்து, அசிலோக், ஜினெடாக் மற்றும் ரான்டாக் போன்ற பிரபலமான பெயர்களில் விற்கப்படுகிறது, மேலும் இது பொதுவாக அமிலத்தன்மை மற்றும் வயிற்றுவலி தொடர்பான பிரச்சினைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 26 மருந்துகள் இனி விற்பனைக்கு கிடைக்காது என்று கருதப்படுகிறது..
நீக்கப்பட்ட மருந்துகள் :
- Alteplase
- Atenolol
- Bleaching Powder
- Capreomycin
- Cetrimide
- Chlorpheniramine
- Diloxanide furoate
- Dimercaprol
- Erythromycin
- Ethinylestradiol
- Ethinylestradiol(A) Norethisterone (B)
- Ganciclovir
- Kanamycin
- Lamivudine (A) + Nevirapine (B) + Stavudine (C)
- Leflunomide
- Methyldopa
- Nicotinamide
- Pegylated interferon alfa 2a, Pegylated interferon alfa 2b
- Pentamidine
- Prilocaine (A) + Lignocaine (B)
- Procarbazine
- Ranitidine
- Rifabutin
- Stavudine (A) + Lamivudine (B) 25. Sucralfate
- White Petrolatum
ரானிடிடைன் மருந்து புற்றுநோயை ஏற்படுவத்துவதாக உலகம் முழுவதும் பரவலாக கருதப்படுகிறது.. குறிப்பாக 2019 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவை தளமாகக் கொண்ட உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ரானிடிடைன் மருந்தில் புற்றுநோயை உண்டாக்கும் கலப்படத்தைக் கண்டறிந்தது.. அதாவது ரானிடிடைன் கொண்ட மருந்துகளின் மாதிரிகளில் “ஏற்றுக்கொள்ள முடியாத அளவில்” புற்றுநோயை உண்டாக்கும் தூய்மையற்ற N-nitrosodimethylamine (NDMA) இருப்பது கண்டறியப்பட்டது.. இதனால் மருந்தின் ஆபத்து குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்த மருந்தை அத்தியாவசிய மருந்து பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) ஆகியவற்றுடன் மத்திய சுகாதார அமைச்சகம் விவாதித்துள்ளது.. இந்த சூழலில் அத்தியாவசிய மருந்து பட்டியலில் இருந்து ரானிடிடைன் உட்பட பல மருந்துகளை மத்திய அரசு நீக்கி உள்ளது..
இதற்கிடையில், புதிய அத்தியாவசியப் பட்டியல் வெளியாகியுள்ளதால், இந்தியாவில் அதிக தேவை உள்ள பல மருந்துகளின் விலை குறைய வாய்ப்புள்ளது, இதில் இன்சுலின் கிளார்கின் போன்ற நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள், டெலாமனிட் போன்ற காசநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ஐவர்மெக்டின் போன்ற ஆண்டிபராசைட் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது..