fbpx

27 பேர் உயிரிழப்பு, 106 பேர் காயம்… லிபியாவில் நடந்த பயங்கர மோதல்..!

லிபியா நாட்டில் உள்ள திரிபோலி நகரத்தில் ஆயுதமேந்திய இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக ஆங்கில நாளிதழ் அறிக்கை வெளியிட்டது. மொத்தம் 106 பேர் காயமடைந்துள்ளதாக அவசரகால சேவைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை 444 படைப்பிரிவின் தளபதி மஹ்மூத் ஹம்சா, திரிபோலியின் விமான நிலையம் வழியாக பயணிக்க முயன்றபோது தடுத்து வைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த மோதல் தொடங்கியதாக செய்திகள் கூறப்படுகிறது. ஹம்சாவை நடுநிலைக் கட்சிக்கு மாற்ற ஐ.நா-அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒற்றுமை அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மோதல்கள் நிறுத்தப்பட்டன என்று அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான LANA தெரிவித்துள்ளது.

மேலும் லிபியா நாட்டு அரசு செய்தி நிறுவனத்தின் அறிக்கையின் படி, “நகரத்தில் ஆயுதமேந்திய இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். ஒரே இரவில் நடந்த இந்த சண்டை மிகவும் கடுமையானதாகக் கருதப்படுகிறது. மேலும், புதிய ஒப்பந்தம் திரிப்போலியில் உள்ள அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவருகிறது, இராணுவப் பிரிவுகளை அவற்றின் முகாம்களுக்கு மாற்றுவது, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சொத்து சேதத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தால் இழப்பீடுகளை வழங்குதல்” போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

லிபியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் ஆதரவு மிஷன் (UNSMIL) செவ்வாயன்று, “நேற்று முதல் திரிபோலியில் பாதுகாப்பு சம்பவங்கள் மற்றும் முன்னேற்றங்கள் மற்றும் பொதுமக்கள் மீது அவற்றின் தாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

Kathir

Next Post

World Cup 2023 | இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை..!! ஐஐசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Wed Aug 16 , 2023
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு தொடங்கும் தேதியை ஐசிசி அறிவித்துள்ளது. வரும் 25ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ள நிலையில், டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு தொடங்கப்பட இருக்கிறது. சென்னையில் நடக்கும் இந்தியா – ஆஸ்திரேலியா போட்டிக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை செய்யப்படவுள்ளது. அதேபோல், இந்தியாவும் பாகிஸ்தானும் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் […]

You May Like