Sexually assault: மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தில் ஐந்து வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் கடந்த 22ம் தேதி 5 வயது சிறுமியை, 17 வயது சிறுவன் அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், மதுபோதையில் இருந்த சிறுவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் அந்த சிறுமி மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து, சுயநினைவு திரும்பிய பிறகு, தனது வீட்டிற்கு சென்ற சிறுமி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார்.
உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் இருந்த சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மேலும் அவரது அந்தரங்க பாகங்கள் கடுமையாக சேதமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.அவருக்கு பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, அவரது பிறப்புறுப்பில் 28 தையல்கள் போட வேண்டியிருந்தது. பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் தலையை தரையில் பலமுறை மோதி கொல்ல முயன்றதாகவும், இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தக் குற்றத்திற்காக, சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் அவரை வயது வந்தவராகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். குவாலியரைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்த சம்பவத்தைக் கண்டித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையைத் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய உத்தரவிட்டார்.
“எங்கள் பிராந்தியத்திலும் மாநிலத்திலும் இதுபோன்ற குற்றங்களுக்கு இடமில்லை. இந்த சம்பவத்தை உடனடியாக அறிந்து கொண்ட நான், மாவட்ட நிர்வாகம் மற்றும் சிவபுரி காவல் கண்காணிப்பாளரிடம் பேசி, இதுபோன்ற கொடூரமான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன், இதனால் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவரை வயது வந்தவராகக் கருதி, அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை வழங்க வேண்டும் என்று சிறுமியின் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.
Readmore: “எவ்வளவு ஆணவம்; திமிர் பிடித்தது இங்கிலாந்து அணி”!. முன்னாள் கேப்டன் மார்க் புட்சர் கடும் சாடல்!