fbpx

இன்ஸ்டா காதல் மனைவியுடன் எல்லாம் முடிந்ததும் மறுநாளே 2-வது திருமணம்..!! ஆவடி ஆம்ஸ்ட்ராங் போலீசில் சிக்கியது எப்படி..?

சென்னையில் இன்ஸ்டாகிராம் காதலியை முதல் நாளும், வீட்டில் பார்த்த பெண்ணை 2-வது நாளும் திருமணம் செய்த இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கேளம்பாக்கம் சர்ச் தெருவைச் சேர்ந்த பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு மதுராந்தகம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டு திருநின்றவூரில் தனியாக வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

திருமணத்துக்குப் பின் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண்ணிடம் நகை, பணம் கேட்டு டார்ச்சர் செய்து துன்புறுத்திய ஆம்ஸ்ட்ராங், ஒருகட்டத்தில் அவரை பிரிந்து தன் வீட்டிற்குச் சென்றுள்ளார். மேலும், அவரது உடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதையடுத்து, இளம்பெண் அவரை தேடி கேளம்பாக்கம் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஆம்ஸ்ட்ராங், காதல் திருமணம் செய்த அடுத்த நாளே வீட்டில் பார்த்த பெண்ணையும் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக அவரிடம் கேட்ட போது, இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் மிரட்டியுள்ளார். அப்படி இருந்த போதிலும் தான் ஏமாந்ததை தாங்க முடியாமல் முதல் மனைவி, பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து கேளம்பாக்கத்தில் தலைமறைவாக இருந்த பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read More : “எப்போதும் போதையில் உலா வரும் சுறாக்கள்”..!! அதுவும் கொக்கைனாம்..!! விஞ்ஞானிகள் அதிர்ச்சி கண்டுபிடிப்பு..!!

English Summary

A young man who married his Instagram girlfriend on the first day and the woman he saw at home on the second day was arrested in Chennai.

Chella

Next Post

பள்ளி மாணவியின் அம்மா ஃபோனுக்கு வரிசையாக வந்த ஆபாச வீடியோ..!! ஆசிரியர் செய்ற வேலையா இது..? கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

Wed Jul 24 , 2024
A teacher who sexually harassed a schoolgirl by sending obscene pictures was arrested and jailed under the POCSO Act.

You May Like