ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் உள்ள ஜங்காரெட்டி கூடத்தை சேர்ந்தவர் சசி. இவருக்கு உதயகுமார், ராகுல், ரேணுகா என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது கணவனைப் பிரிந்து விட்டார். இந்நிலையில், இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பவன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனால் சசி தனது மூன்று குழந்தைகளுடன் பவன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று சசியின் குழந்தைகளான உதயகுமார், ராகுல், ரேணுகா ஆகியோரை பவன் செல்போன் சார்ஜர் ஒயரால் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த குழந்தைகள், வலி தாங்காமல் அலரி துடித்தனர். குழந்தைகளின் அலரல் சத்தம் கேட்டு பதறிப்போன அக்கம்பக்கத்தினர், சசியின் வீட்டிற்க்குள் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது பவன் தாக்கியதால் குழந்தைகள் படுகாயம் அடைந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக குழந்தைகளை மீட்டு ஜங்காரெட்டி கூடத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பவன் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த குழந்தைகள் இது குறித்து கூறும் போது, “கடந்து சில நாட்களாகவே பவன் எங்களை தாக்கி, காயத்தின் மீது மிளகாய் தூளை கொட்டுகிறார்.
பின்னர் வலி தாங்க முடியாமல் நாங்கள் அலறி துடிப்பதை வேடிக்கை பார்ப்பார். ஆனால் எங்கள் தாய் ஒன்றும் செய்யாமல் பவனின் செயலை வேடிக்கை பார்ப்பார். சில நேரங்களில் பவன் சாப்பாட்டில் மிளகாய்த்தூளை கொட்டி பிசைந்து எங்களை சாப்பிட வைக்கிறார். சாப்பிட மறுத்தால் கையில் கிடைத்த பொருளை எடுத்து எங்களை கடுமையாக தாக்குகிறார்” என்று வேதனையுடன் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பவனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: நடிகர் கமலால் பால்கனியில் இருந்து கீழே குதித்த நடிகை.. யார் தெரியுமா?