fbpx

Earthquake: ஒரே மாதத்தில் 3 முறை அடுத்தடுத்த நிலநடுக்கம்…! அச்சத்தில் மக்கள்…!

அருணாசல பிரதேசத்தின் மேற்கு காமெங் நகரில் இன்று அதிகாலை 1.49 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது. இதனை நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. பொதுமக்கள் தூங்கி கொண்டிருக்கும் போது ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தின் பாதிப்பு பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை அருணாச்சல பிரதேசத்தில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.முதல் நிலநடுக்கம், 3.7 ரிக்டர் அளவில், அதிகாலை 01:49 மணிக்கு ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது. அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு கமெங்கில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இரண்டு மணி நேரத்திற்குள், அதிகாலை 03:40 மணிக்கு, இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு கமெங்கில் மையம் கொண்டிருந்தது. இரண்டாவது நிலநடுக்கம் 5 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.

அருணாசல பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி காலை 10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. பாங்கின் பகுதியில் இருந்து வடக்கே 975 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் 60 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அருணாச்சல பிரதேசத்தில் இந்த மாதத்தில் மட்டும் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

Car | வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை..!! சொந்த கார் + வாடகை வாகனங்கள்..!! மீறினால் நடவடிக்கை..!!

Thu Mar 21 , 2024
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், போக்குவரத்துத்துறை ஆணையர் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் […]

You May Like