fbpx

அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்கள்.. பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்..

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் இன்று அடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது..

உத்தரகாசியில் இன்று அதிகாலை 2.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இரண்டு தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி தேவேந்திர பட்வால் தெரிவித்தார். நள்ளிரவு 12.45 மணியளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தின் மையம், மாவட்டத்தின் பத்வாரி பகுதியில் உள்ள சிரோர் வனப்பகுதியில் இருந்ததாக அவர் கூறியுள்ளார்..

இதை தொடர்ந்து அடுத்தத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.. ஆனால் அவை மிதமான அளவில் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. எனினும் இந்த நிலநடுக்கத்தால், சமையலறை பாத்திரங்கள் தரையில் விழ ஆரம்பித்தன.. ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் சத்தமிட தொடங்கியதால், தூங்கிக் கொண்டிருந்த பீதியுடன் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் கிட்டத்தட்ட இரவு முழுவதும் தங்கள் வீடுகளுக்கு வெளியே இருந்தனர். எவ்வாறாயினும், உத்தரகாசியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால், உயிர் மற்றும் சொத்துக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை..

Maha

Next Post

"நிர்வாணமாக கட்டி போட்டு உடலெங்கும் மிளகாய் பொடி......" மகளின் கண் முன்னே நடந்த மனதை உலுக்கிய கொடூரம்!

Sun Mar 5 , 2023
மகளின் கண் முன்னே தாயை நிர்வாணமாக்கி அவரது உடல் பாகங்களில் மிளகாய் பொடியை தூவி கொடுமை செய்துள்ள கணவனை பற்றிய செய்தி இலங்கையில் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை நாட்டின் அங்கம்பிட்டிய பிரதேசத்தைச் சார்ந்த பெண் ஒருவர் அங்குள்ள காவல் துறையினரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் தனது கணவர் குடித்து விட்டு வந்து தன்னை வன்கொடுமை செய்வதாக குறிப்பிட்டு இருக்கிறார். தனது கணவர் தன்னுடைய […]

You May Like