பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

காலரா பாதிப்பு காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பலர் பாதிக்கப்பட்டு வந்தனர்.. மேலும் பலருக்கு காலரா பாதிப்பு இருப்பது உறுதியானது.. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு நேற்று மருத்துவ குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டார்.. இதுவரை காரைக்காலில் 1000-க்கும் அதிகமானோருக்கு காலரா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுடன் கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும், சாப்பிடும் முன் கை கழுவுதல், சரியாக கழுவி சமைத்த உணவுகளை சாப்பிடுதல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..

இந்நிலையில் காலரா பாதிப்பு காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் அறிவித்துள்ளார்.. பள்ளி, கல்லூரிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யவிருப்பதால் இந்த விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..

Maha

Next Post

வரும் 7-ம் தேதி வரை கனமழை பெய்யும்.. இந்த மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க...

Mon Jul 4 , 2022
தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கு திசை காற்றின்‌ மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை […]

You May Like