fbpx

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 ரசிகர்கள்…! நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் யாஷ்…!

கன்னட தொலைக்காட்சி தொடர்கள் மூலம் கலைப்பயணத்தை தொடங்கி, 2007 ஆம் ஆண்டு வெளியான ஜம்பதா ஹுடுகி என்ற படம் மூலம் கன்னட திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் நடிகர் யாஷ். கன்னடத்தில் பல படங்களில் நடித்திருந்த நடிகருக்கு இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் அறியும் வகையில் கொண்டு சேர்த்த படம் தான் “கேஜிஎஃப்” இந்த படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்திய ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகராக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் யாஷ்-ன் 38வது பிறந்தநாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளுக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக வாழ்த்து தெரிவித்திருந்தனர். கர்நாடக மாநில கடக் மாவட்டத்தில் நடிகர் யாஷ் பிறந்தநாளை சிறப்பிக்க ரசிகர்கள் பேனர் வைக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்னழுத்த கம்பி மீது பேனர் உரசியதில் 3 பேர் உயிரிழந்தனர், மேலும் மூன்று ரசிகர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பேனர் வைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 ரசிகர்களின் குடும்பத்தினரை நேற்றைய தினம் அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் நடிகர் யாஷ். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 3 ரசிகர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து அறுதல் கூறியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுபோன்ற வெறித்தனமான செயல்களை எதிர்பார்க்கவில்லை என்றும் தனது ரசிகர்கள் தங்கள் குடும்பத்திற்கு பொறுப்பாக இருக்க வேண்டும்” என்றும் யாஷ் கூறினார். இது போல நிகழக்கூடும் என்ற காரணத்திற்காக தான் பிறந்தநாளை கொண்டாடுவதில்லை என்றும் தெரிவித்தார்.

Kathir

Next Post

மக்களே..!! ஊருக்கு தனியார் பேருந்தில் போறீங்களா..? கட்டணம் எவ்வளவு தெரியுமா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Tue Jan 9 , 2024
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் 35% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 13,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்ட அறிவிப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. […]

You May Like