fbpx

பெங்களூருவில் இருந்து காணாமல்போன மாணவிகள் மீட்பு …. போலீஸ் கண்டுபிடித்தது எப்படி? ..

பெங்களூருவில் இருந்து கடந்த 6ம் தேதி காணாமல் போன பள்ளி மாணவிகள் சென்னையில் இருப்பதை உறுதிசெய்துகொண்டு போலீசார் அவர்களை மீட்டுள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த மாணவி தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றார். இவளது தந்தையின் இரண்டாவது மனைவியை பிடிக்காமல் போனதால் வீட்டைவிட்டு போக முடிவு செய்தால் , இதே போல மற்றொரு மாணவி தனது அம்மாவின் இரண்டாவது கணவரை பிடிக்காமல் போனதால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். மூன்று மாணவிகள் திட்டமிட்டு வெளியேறியுள்ளனர். வீட்டில் இருந்த ரூ.30,000 பணத்தை எடுத்துக் கொண்டு ரயில் நிலையம் சென்றபோது அவர்களை கவனித்த திருடன் கைப்பையை எடுத்துக் கொண்டு ஓடினான்.இந்நிலையில் 3 பேரும் எப்படியோ சென்னையை அடைந்தார்கள். அங்கிருந்து ஆட்டோ ஓட்டுனர் ஒருவரிடம் நாங்கள் அனாதைகள் , சென்னைக்கு வந்துவிட்டோம் என கருணை அடிப்படையில் உதவி கேட்டுள்ளனர். எங்களுக்கு வேளாங்கண்ணி என்ற இடத்தில் ஏதாவது வேலை வாங்கி கொடுங்கள் என கேட்டுள்ளனர்.

உதவி செய்ய முன்வந்த அவர் , சென்னையில் உள்ள தொழிற்சாலையில்வேலை கேட்டு வாங்கி தந்துள்ளார். கடந்த செப்டம்பர் 23ம் தேதி தவறுதலாக உறவினர் வீட்டுக்கு கால் செய்துள்ளார். அந்த அழைப்பில் வந்தவரிடம் எதுவும் பேசாமல் வைத்துள்ளார். இது பற்றி மாணவியின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. உடனடியாக போலீசார் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.

அதே நாளில் ஒரு போலீசை காயின் பூத் எங்கு உள்ளது என விசாரிக்க சென்னைக்கு அனுப்பி உள்ளார். தங்களிடம் இருந்த போட்டோவை வைத்து வீடு வீடாக சென்று மாணவிகளை தேடி உள்ளனர். அடுத்த நாள் ஒரு பெண் ஒருவர் தங்களை அனாதை என கூறிக் கொண்டு சென்னை வந்ததாக அடையாளம் கூறியுள்ளார். இதையடுத்து தொழிற்சாலைக்கு சென்று 3 பேரையும் மீட்டனர்.

Next Post

பெரும் சோகம்: திமுக அமைச்சரின் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை!!

Tue Sep 27 , 2022
அதிரடி அரசியலுக்குச் சொந்தக்காரர், தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு. அதிமுக மதுசூதனனின் உறவினர் இவர். ஒருகாலத்தில் அதிமுக-வின் வடசென்னை அடையாளமாக விளங்கியவர். பொது இடங்களில் ஜெயலலிதா இவரைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார். 2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்களில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக உறுப்பினராக போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், கட்சித் தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2011 ஜனவரியில் திமுக-வில் இணைந்தார் […]

You May Like