fbpx

புது ரூல்ஸ்…! மழை விடுமுறையை 3 மணி நேரத்திற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்…! பள்ளி கல்வித்துறை உத்தரவு…!

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாள்களில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அதி கனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். மேலும் லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்க கூடாது. தொடர்ந்து, விடுமுறை குறித்த முடிவை பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும். மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம், பாதிப்புகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்க கூடாது. மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாள்களில் வகுப்புகளை நடத்த வேண்டும். விடுமுறை காரணமாக எந்தப் பாடங்களும் விடுபடாமல் மாணவர்களுக்கு முழுமையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி இருக்க கூடாது. அவ்வாறு தேங்கியிருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள்.!

Sat Nov 18 , 2023
உணவு எந்த அளவிற்கு நமது ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கிறதோ அதே அளவு நமது உடலில் நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறது. நல்ல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளும் போது உடல் ஆரோக்கியம் மேம்படும். அதேநேரம் கெட்ட கொழுப்புகள் அதிகம் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளும் போது உடலுக்கு பல்வேறு விதமான தீங்குகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற உணவுகளால் நமது ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது […]

You May Like