தமிழகத்தில் குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள 92 இடங்களுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர்..
இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் குரூப் 1 நிலையில் துணை ஆட்சியர் 18, காவல் துணை கண்காணிப்பாளர் 26, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் 13, வணிகவரி உதவி ஆணையர் 25, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் 7, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 3 என காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான ஜூலை மாதம் 21-ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதை தாெடர்ந்து 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வை இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையில் எழுத உள்ளனர். 200 மதிப்பெண்களுக்கு விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய கொள்குறி முறையில் தேர்வு நடைபெறுகிறது. தேவர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு முன்பாகவே தேவதைக்கு செல்ல வேண்டும் அதன் பின் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அரசு கூறிய அனைத்து விதிமுறை விட்டாயே பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.