பழங்குடியினப் பெண் ஒருவர், 6 மாதங்களுக்கு முன் தன்னை 3 பேர் கடத்திச் சென்று, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் மத்தியப் பிரதேசத்தின் மந்த்சூர் மாவட்டத்தில் உள்ள பாகூர் கிராமத்தைச் சேர்ந்தவர். புதன்கிழமை கிஷன்கஞ்ச் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில், குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து உடல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக கிஷன்கஞ்ச் காவல்நிலைய போலீசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண் 3 பேரின் பெயரைக் கூறியுள்ளார். பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள 3 குற்றவாளிகளைப் பிடிக்க தேடுதல் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.