fbpx

சூப்பர் அறிவிப்பு…! Metro- வில் பயணம் செய்தால் 2024 மார்ச் 15-ம் தேதி வரை 3 மாதங்கள் பரிசு பொருட்கள்…!

சென்னை மெட்ரோ ரயில்களில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு, 2024 மார்ச் 15ம் தேதி வரை 3 மாதங்கள் பரிசு பொருட்களை வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நிர்வாகம் தரப்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமான நிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ வரை மற்றும் பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை மெட்ரோ இரயில் சேவைகளை வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை மெட்ரோ இரயில்களில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 15.12.2023 முதல் 15.03.2024 வரை 3 மாதங்கள் என ஒவ்வொரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசு பொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் மாதம் 15.12.2023 முதல் 14.01.2024 வரை , இரண்டாம் மாதம் 15.01.2024 முதல் 14.02.2024 வரை, மூன்றாம் மாதம் 15.02.2023 முதல் 15.03.2024 வரை இருக்கும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி உடன் இணைந்து பரிசு பொருள்களை வழங்கும். பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும். பயணிகளை ஊக்குவிக்கவும் இவை வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.

Vignesh

Next Post

தமிழக புயல் பாதிப்பு.! மத்திய வானிலை ஆய்வு மையத்தின் தவறு என்ன.? தலைமைச் செயலாளர் அறிக்கை.!

Wed Dec 20 , 2023
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் மாநில தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா. வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர் வேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் நிவாரணத் தொகை அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் […]

You May Like