சென்னையில் இருந்து மதுரை சென்ற 3 ஆம்னி பேருந்துகள், விருதாச்சலம் வேப்பூர் மேம்பாலம் அருகே ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டு விபத்தில் சிக்கியது. 35 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மிகவும் பிரசித்தி பெற்ற மகா சிவராத்திரியை முன்னிட்டு திருநெல்வேலி, திருச்செந்தூர், செங்கோட்டை, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் என பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக அதி நவீன சொகுசு பேருந்து மற்றும் இருக்கை – படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பலர் தனியார் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு நேற்று பயணம் செய்தனர். சென்னையில் இருந்து மதுரை சென்ற 3 ஆம்னி பேருந்துகள், விருதாச்சலம் வேப்பூர் மேம்பாலம் அருகே ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டு விபத்து. 35 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விபத்து குறித்து போலீசார வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தீவிர படுத்தியதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.